ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

           ஹைக்கூ


இன்றைய பசியை
மறக்கச் செய்தது
மாலை பெய்த பலத்த மழை.


மதங்களையறியாத
மற்றுமொரு ஒரே மொழி
மழலை மொழி


பார்வைக்கு வைத்திருந்தனர்
தொல்பொருட்காட்சியில்
வட்டக் கிணறும் சதுரக் கிணறும்


தன்முகம் பார்க்க
அலையும் நிலா
நீரின்றிக் குளம்.

1 கருத்து:

  1. குறும்பாக்கள் அனைத்தம் அரும்பாக்கள். வறுமையும் இயலாமையும் போட்டிபோட்டுக்கொண்டு பிரதிபலிக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு