செவ்வாய், 19 மே, 2020
நாச்சியார் திருமொழி!: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு
நாச்சியார் திருமொழி!: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு பாடல் :89 நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான் நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவ...
சனி, 4 ஜனவரி, 2020
அக்காரக் கனிச்சுவையே
நெஞ்சத்தின் நினைவலைகள்
நெடுந்தூரம் கொணர்ந்தனவே
நெடுந்தூரம் கொணர்ந்ததனால்
நிலைமாறிப் போனேனே
சஞ்சலத்தில் வாழ்ந்தமனம்
சங்கடங்கள் கொண்டதுவே
சங்கடங்கள் கொண்டதனால்
தடுமாறிப் போனேனே
வஞ்சகத்து மூடமனம்
வழிதவற வைத்ததுவே
வழிதவற வைத்ததனால்
வகையிழந்து போனேனே
பிஞ்சுமனம் பித்தெனவே
பேதலித்துப் போனதுவே
பேதலித்துப் போனதனால்
பித்தனென வானேனே
திக்குகளே அறியாமல்
திரிந்தலைந்து நின்றேனே
திரிந்தலைந்து நின்றதனால்
திசைமாறிப் போனேனே
தக்கதிது வெனவறியும்
தந்திரமும் அறியேனே
தந்திரமறி யாததனால்
தடம்மாறிப் போனேனே
மொக்கவிழும் மலரெனவே
முழுமனமும் கொண்டேனே
முழுமனமுங் கொண்டதனால்
முறைமாறிப் போனேனே
சிக்கலென வருங்கவலை
சிந்தைமிகக் கொண்டேனே
சிந்தைமிகக் கொண்டதனால்
செயலறியா நின்றேனே
முக்காலம் உணர்ந்தவனே
முழுவதுமாய் சரண்புகுந்தேன்
முழுவதுமாய் சரண்புகுந்த
முறையாலே நானழிந்தேன்
இக்காலம் இக்கணமே
எனையாள வேண்டுவனே
எனையாளும் வேண்டுவரம்
எப்போதும் வேண்டுவனே
எக்காலம் என்றாலும்
என்றென்றும் நின்புகலே
என்றென்றும் நின்புகலால்
எள்ளளவும் துன்பிலனே
அக்காலம் உலகளந்த
அற்புதனே வேங்கடவா
அக்காரக் கனிச்சுவையே
அடியேனுக் கருள்வாயே
இளவல் ஹரிஹரன் 4-1-2020
நெஞ்சத்தின் நினைவலைகள்
நெடுந்தூரம் கொணர்ந்தனவே
நெடுந்தூரம் கொணர்ந்ததனால்
நிலைமாறிப் போனேனே
சஞ்சலத்தில் வாழ்ந்தமனம்
சங்கடங்கள் கொண்டதுவே
சங்கடங்கள் கொண்டதனால்
தடுமாறிப் போனேனே
வஞ்சகத்து மூடமனம்
வழிதவற வைத்ததுவே
வழிதவற வைத்ததனால்
வகையிழந்து போனேனே
பிஞ்சுமனம் பித்தெனவே
பேதலித்துப் போனதுவே
பேதலித்துப் போனதனால்
பித்தனென வானேனே
திக்குகளே அறியாமல்
திரிந்தலைந்து நின்றேனே
திரிந்தலைந்து நின்றதனால்
திசைமாறிப் போனேனே
தக்கதிது வெனவறியும்
தந்திரமும் அறியேனே
தந்திரமறி யாததனால்
தடம்மாறிப் போனேனே
மொக்கவிழும் மலரெனவே
முழுமனமும் கொண்டேனே
முழுமனமுங் கொண்டதனால்
முறைமாறிப் போனேனே
சிக்கலென வருங்கவலை
சிந்தைமிகக் கொண்டேனே
சிந்தைமிகக் கொண்டதனால்
செயலறியா நின்றேனே
முக்காலம் உணர்ந்தவனே
முழுவதுமாய் சரண்புகுந்தேன்
முழுவதுமாய் சரண்புகுந்த
முறையாலே நானழிந்தேன்
இக்காலம் இக்கணமே
எனையாள வேண்டுவனே
எனையாளும் வேண்டுவரம்
எப்போதும் வேண்டுவனே
எக்காலம் என்றாலும்
என்றென்றும் நின்புகலே
என்றென்றும் நின்புகலால்
எள்ளளவும் துன்பிலனே
அக்காலம் உலகளந்த
அற்புதனே வேங்கடவா
அக்காரக் கனிச்சுவையே
அடியேனுக் கருள்வாயே
இளவல் ஹரிஹரன் 4-1-2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)