ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டு வாழ்த்துகள்

         2018 புத்தாண்டு வாழ்த்துகள்

          நண்பர்களே........
          புத்தாண்டு வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்

         2017 ஏற்றங்கள் தந்தது பலவாய்...
          ஆண்டின் தொடக்கத்தில்
          பொங்கல் கவிதைப்போட்டியில் கிடைத்த
          ஆயிரம் ரூபாய் பரிசு.

          மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி பாரதி" விருதும் கேடயமும்.

          உரத்த சிந்தனை வெண்பா பரிசு

          மின்னல் தமிழ்ப்பணி வெண்பா பரிசு

          "முத்து கமலம் " மின்னிதழில் கவிதைக்கான பரிசு

           மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி மாமணி" விருதும் வெற்றிக்கோப்பையும்

            நிலா முற்றம் முக நூல் குழுவின்
            முதலாமாண்டு விழாவில்
            "கவி நிலா" விருதும் சான்றும் பரிசும்

             தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவுச்
             சிறுகதைப் போட்டி 2017 ல் எனது
             "இங்கேயும் சில பூக்கள் மலரும்" என்ற
               சிறுகதைக்கு முதல் பரிசு ரூ20000/-

             மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மலேயா
             தமிழ் மன்றம் நடத்திய சிறுகதை நூற்றாண்டு
             விழாவில்,
             "சிந்தனைச் சிகரம்" என்ற விருதும், சான்றும்
              துணைவேந்தர், மற்றும் தவத்திரு குன்றக்குடி
               அடிகளார் கரங்களால் தரப்பட்டது

              "இங்கேயும் ஒரு சொர்க்கம்" என்ற எனது
                சிறுகதை, மேற்படி விழா முன்னிட்டுத்
                 தொகுக்கப்பெற்ற நூறு சிறுகதைகள் 2ம்
                 தொகுப்பில் இடம்பெற்றது.

                  கவிதைப் பூங்கா முகநூல் குழுவின்
                  "கவிச்சுடர்" விருது

                 மரபுமாமணி பாவலர் வரதராசர் மரபுக்
                 கவிதைச் சோலையில் "பைந்தமிழ்ச் சுடர்"
                 விருது

               டி. எம். எஸ். நற்பணி மன்றத்தின் 31ஆவது
               ஆண்டு விழாவில் "சிறந்த எழுத்தாளர், சமூக
                சேவகர்" விருது

     எனப் பலவாறாய்க் கௌரவித்த 2017ஐ வணங்கி,
     அதற்குக் காரணமான என் பெற்றோரையும்,
      மனைவியையும், நண்பர்களையும் இணைத்து
      முழுமுதற் கடவுளை வணங்கி மகிழ்கிறேன்.

      2018ம் மேலும் சிறப்புகள் சேர்க்கும் என்ற தன்
      நம்பிக்கையில் வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்

     அன்புடன்,   உங்கள் இளவல்.

சனி, 11 நவம்பர், 2017

பயனுள்ள பொழுதுபோக்கு : திருமூலரின் கடவுள் விளக்கம்-5( அன்றும் இன்றும் )ச...

பயனுள்ள பொழுதுபோக்கு : திருமூலரின் கடவுள் விளக்கம்-5( அன்றும் இன்றும் )
ச...
: திருமூலரின் கடவுள் விளக்கம் -5 ( அன்றும் இன்றும் ) சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள CERN என்னும் அணு ஆராய்ச்சிக் கூடத்தில் சித...

பயனுள்ள பொழுதுபோக்கு :                                  திருமூலரின் கடவுள...

பயனுள்ள பொழுதுபோக்கு :                                  திருமூலரின் கடவுள...:                                   திருமூலரின் கடவுள் விளக்கம் -4                                          ( வழிகாட்டுப் பாடல்கள் ) ...

பயனுள்ள பொழுதுபோக்கு :                               திருமூலரின் கடவுள் வ...

பயனுள்ள பொழுதுபோக்கு :                               திருமூலரின் கடவுள் வ...:                                திருமூலரின் கடவுள் விளக்கம் -2 1. அணுவின் அணுவினை ஆதிபிரானை     அணுவின் அணுவினை ஆயிரம் கூறிட்ட...

பயனுள்ள பொழுதுபோக்கு :              திருமூலரின் கடவுள் விளக்கம்-316.சிந்...

பயனுள்ள பொழுதுபோக்கு :              திருமூலரின் கடவுள் விளக்கம்-3
16.சிந்...
:               திருமூலரின்   கடவுள்   விளக்கம் -3 16. சிந்தையது   என்னச்   சிவன்   என்ன   வேறு   இல்லை       சிந்தையின்   உள்ளே   சி...

வெள்ளி, 30 ஜூன், 2017

கவியருவி ம. ரமேஷ்: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) - ரசித...

கவியருவி ம. ரமேஷ்: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) - ரசித...: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) குறித்த சிறந்த  ஹைக்கூக்கள்: 1. பின்பனி இரவில் உறைந்து போயிருந்தன காதல் கிளிஞ்சல்கள் -Ilav...

வியாழன், 29 ஜூன், 2017

கஜல் கவிதைகள்

                     கஜல் கவிதைகள
***
வளர்பிறை நம் காதல் என்றாய்
தேய்பிறை உண்டெனச் சொல்லாமல் சொன்னாய்.

****
கண்களால் பார்க்கும் பரவசம் சொர்க்கங்கள்
கண்ணீரால் பார்த்த தருணம் நரகங்கள்

*****
கண்ணசைவில் காதல் எனக்கான வரங்கள்
கையசைவில் பிரிவின் துயரம் சாபங்கள்.

*******
அதிகாலைப் பூக்களின் பனித்துளிகள்
இரவு முழுதும் சிந்திய கண்ணீர்த்துளிகள்.

**********
கோலம் போடும் அழகை ரசிக்கவந்தேன்
காலால் அழித்து ரசனையை மறுதளித்தாய்.

*************
கவிதைகளால் காதல் வளர்ப்போமென்றாய்
கண்ணீரில் நனைந்த கவிதைகளை ரசிக்கின்றாய்.

*****************
சன்னலில் எட்டிப்பார்த்த நிலவு
கதவை அடைத்துக்கொண்டு அமாவாசையாக்கியது.

*********************

வெற்றிபெறும் போதெல்லாம் துள்ளிக்குதித்தாய்
காதல் தோல்வியை நிரந்தரமாக்கினாய்.

*************************

உச்சத்தைத் தொட்டதாய் காதல் தந்தாய்
உயர ஏற்றிவிட்டுத் தள்ளிவிட்டாய்.

********************************

மெல்லக்கொல்லும் விடமாய் உன் நினைவுகள்
மிடறு மிடறாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றேன்

*************************************

பந்தயம் வைத்து வெற்றி பெற்ற காதல்
பரிகாசம் செய்யவே பிரிந்து போனாய்.

*******************************************

அடைமழை அடர்த்தியில் நனையவைத்தாய்
குடைபிடிக்காமலேயே கண்ணீரில் நனையவைத்தாய்

************************************************

பிரியத்தான் காதலிததோமா
காதலிக்கத்தான் பிரிந்தோமா
விடைதெரியாமல் இங்குமங்கும் தவிக்கின்றோம்.

**************************************************
      கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை
                     98416 13494
***************************************************